fbpx

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய என்ன அவசியம்? தமிழக அரசு எதிர்பாரா ட்விஸ்ட் வைத்த உச்ச நீதிமன்றம்!!

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

யூ டியூபரான சவுக்கு சங்கர் பேட்டி ஒன்றில் தமிழக பெண் போலீசார் பற்றி இழிவாக விமர்சித்து பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. இதனால் சவுக்கு சங்கரை தமிழக போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் கோவை உள்ளிட்ட பல மாவட்ட காவல் நிலையங்களில் அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பாய்ந்தது. இதனால் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தினர். அதாவது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி பாலாஜியோ, அரசு பதிலளிக்க அவகாசம் வழங்க உத்தரவிட்டார். இதனால் மூன்றாவது நீதிபதியாக ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். இந்த விசாரணையின் போது, ஆட்கொணர்வு மனுக்களை மீண்டும் 2 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனு மீது சில நாட்களுக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி எம்.சுந்தரேஷ் இந்த விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது.

சவுக்கு சங்கர் மீதான வழக்கின் பின்னணியை கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கரை ஏன் இடைக்காலமாக விடுவிக்க கூடாது. அவரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கையில், சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும், அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார். இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

Read more | பச்சை பட்டாணியில் இவ்வளவு நன்மைகளா? ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை..!!

English Summary

The Supreme Court has questioned the necessity of arresting Chavik Shankar under the Gangster Act.

Next Post

’என்னை கலங்கப்படுத்திட்டீங்க’..!! ’வெளியே வந்து நிரூபிக்கிறேன்’..!! கதறி அழுத கல்யாண ராணி சத்யா..!!

Mon Jul 15 , 2024
I will come out and show you all the evidence and give you an explanation. Please don't make my family ugly says Kalyana Rani Satya.

You May Like