மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொது மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். பலத்த காற்று வீசும்போது மரங்களின்கீழ் நிற்பதை தவிர்க்குமாறு வேண்டும். நீர்நிலைகளின் அருகிலும் பலத்த காற்று வீசும் போது திறந்தவெளியிலும் Selfie எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக சங்க மாவட்ட நிர்வாக அறிவுறுத்தும்போது அதனை ஏற்று நிவாரண முகாம்களில் தங்க வேண்டும். மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு, தீப்பெட்டி, மின்கலன்கள், மருத்துவ கட்டு உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்டப்பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.