fbpx

இளைஞர்களே இது தான் சான்ஸ்… தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு…! நாளை இந்த வாய்ப்பை யாரும் தவற விடாதீங்க…!

நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

இது குறித்து வேலை வாய்ப்பு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10- ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் அடுத்த பயங்கரம்... கத்தி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு...!

Thu Aug 11 , 2022
தமிழகத்தில் ஏற்கனவே சட்ட ஒழுங்கு சீர்கேடு இருப்பதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் […]

You May Like