வரும் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டு என்பது சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்க அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் போதை பொருள் பயன்பாடு என்பது தொடர்ச்சியாக அதிகரித்து தான் வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மத்தியில் இதன் பழக்கம் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை தனது உத்தரவில்; வரும் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும்.இன்று காலை 10.30 மணி அளவில் அனைத்து வகை பள்ளிகளிலும் போதை விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க வேண்டும் என தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.