fbpx

செக் புக் யூஸ் பண்றீங்களா? எழுதும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!!

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் காசோலை புத்தகம் தொடர்பான விதிமுறைகள் முக்கியம். ஏனெனில் இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் காசோலை மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஒரு காசோலையில் சரியாக கையொப்பமிடுவது மிகவும் முக்கியமான செயல்முறையாகும். எனவே அது தொடர்பான விதிமுறைகள் மற்றும் அப்டேட்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

காசோலையை நிரப்பும் போது லட்சத்தை வார்த்தைகளில் எவ்வாறு குறிப்பிடுவது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். லட்சத்தை குறிப்பிடும் போது பலர் lakh என்றும் சிலர் lac என்று குறிப்பிடுகிறார்கள். ரூ.1,00,000 அல்லது அதற்கு அதிகமான தொகையை காசோலையில் குறிக்கும் சரியான வழி lakh-ஆ அல்லது lac-ஆ என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

காசோலையில் ஒரு இடத்தில் பணத்தை எண்களில் எழுத வேண்டும். இரண்டாவது இடத்தில் குறிப்பிட்ட பணத்தை வார்த்தைகளால் குறிப்பிட வேண்டும். உதாரணத்திற்கு 50 ஆயிரம் என்றால் Fifty thousand only என்று எழுத வேண்டும். ஆனால் லட்சம் என்று வரும் போது தான் பலரும் lakh அல்லது lac-ஐ பயன்படுத்துகிறார்கள். இதில் எது சரி?

இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) இது தொடர்பாக ஒரு வழிகாட்டுதலை கொண்டிருக்கிறது. காசோலையில் எழுதும் போது ஒரே நேரத்தில் இரண்டு spelling-களை பயன்படுத்த முடியாது என்று அந்த வழிகாட்டுதல் கூறுகிறது. கரன்சி மற்றும் பேங்க் நோட்ஸ் போன்ற அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக “Lakh” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி கூட அதன் அனைத்து பப்ளிகேஷன்களிலும் Lakh என்ற வார்த்தையை தான் பயன்படுத்துகிறது.

அதே போல வங்கிகளின் original guidelines, லட்சக்கணக்கான ரூபாய் பணம் எடுக்க காசோலையை பயன்படுத்தும் போது ஆங்கிலத்தில் ‘Lakh’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றே கூறுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் லட்சத்தை குறிப்பதற்கான official banking terminology-யில் Lakh என்பதே பொருத்தமான சொல். ரிசர்வ் வங்கியின் வெப்சைட் மற்றும் வங்கிகள் வழங்கும் அனைத்து காசோலைகளிலும் கூட ‘Lakh’ என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக Lac என்ற வார்த்தை எங்கும் பயன்படுத்தப்படுவதில்லை. எனினும் இரண்டு ஸ்பெல்லிங்கையும் யாரும் பயன்படுத்தலாம் என்றாலும் அதிகாரப்பூர்வமாக ஆங்கிலத்தில் லட்சத்திற்கு Lakh என்பதே சரியானது. அதே சமயம் Lakh என்ற சொல்லுக்கு நூறாயிரம் என்று பொருள். ஆனால் பேச்சு வழக்கில் நம் மக்கள் லட்சங்களின் எண்ணிக்கையைக் குறிக்க ‘Lac’ என்ற வார்த்தையை சகஜமாக பயன்படுத்தி பழகிவிட்டனர். ஆனால் அதிரகாரபூர்வ விவரங்களின்படி வங்கி காசோலையில் லட்சங்களை குறிப்பிடும் போது Lac என்பதற்கு பதிலாக Lakh என்றே பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

Read more ; திடீர் நிலச்சரிவு..!! மண்ணில் புதைந்த சுற்றுலாப் பேருந்து..!! பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு..!! எங்கு தெரியுமா..?

English Summary

The term ‘Lac’ is often confused with a substance used for sealing or varnishing, which can create confusion.

Next Post

தோசை விற்று மாதம் ரூ. 6 லட்சம் வருமானம்.. அப்போ வருமான வரி? விவாதத்தை தூண்டிய X பதிவு..!

Fri Nov 29 , 2024
Dosa Seller’s Rs 6 Lakh Monthly Income Stirs Debate. Vendor's Untaxed Income Draws Mixed Reactions

You May Like