fbpx

‘காலம் கனிந்துவிட்டது, எனது பிரவேசம் ஆரம்பமாகிவிட்டது’!. சசிகலா சபதம்!

Sasikala: அ.தி.மு.க.,வின் சமீபத்திய தேர்தல் தோல்வியைக் கருத்தில் கொண்டு, அ.தி.மு.க., அழிந்துவிட்டதாக நினைக்க முடியாது என்று வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என சசிகலா சபதம் எடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.,வில் சாதாரண ஏழை கூட பதவிக்கு வரலாம். ஆனால், தி.மு.க.,வில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. தி.மு.க.,வில் குடும்பத்தில் உள்ள வாரிசுகளை பதவிக்கு கொண்டு வருவர். அ.தி.மு.க.,விலர் சிலர், ஒரு குறிப்பிட்ட ஜாதி அரசியலுக்குள் செல்கின்றனர். ஜாதி அரசியல் நடத்த ஆசைப்பட்டால், அவர்கள் தனியாகச் சென்று செய்யலாம்.

நான் ஜாதி பார்த்திருந்தால், பெங்களூருக்கு செல்லும்போது, பழனிசாமியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்திருக்க மாட்டேன். அ.தி.மு.க.,வுக்கு மேற்கு மாவட்ட மக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். எனவே, எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்பதால், அவருக்கு முதல்வர் பதவி தந்தேன். அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கும், நான்காவது இடத்திற்கும் சென்று விட்டது.

தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கக் கூடாது. அ.தி.மு.க., முடிந்து விட்டது என நினைக்க முடியாது; என் என்ட்ரி ஆரம்பித்து விட்டது. வரும் 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். விரைவில் பட்டிதொட்டியெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது சரியில்லை. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., தான். கோடநாடு கொலை வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது. தேர்தலுக்கு தேர்தல் கோடநாடு பற்றிய பேச்சு வந்தாலும், முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Readmore: முக்கிய அறிவிப்பு…! ஜூன் 19-ம் தேதி முதல் 12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட்…!

English Summary

‘The time is ripe, my entry has begun’!. Sasikala vow

Kokila

Next Post

அடி தூள்...! 3,296 தற்காலிக பணிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஊதியம்...!

Mon Jun 17 , 2024
3,296 as wages up to the month of August, when he will be posted on temporary duty

You May Like