சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை உள்ளது.
நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாட ஆயுத்தமாகி வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். தமிழகத்தில் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பேருந்துகளில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை, அடுத்து அதனை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். தனியார் ஆம்னி பேருந்துகளில், கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் வெளிப்படையாகவே கூடுதல் கட்டணம் குறித்த விவரங்கள் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ.4,000 வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.3,870 மதுரைக்கு ரூ.3,000 வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக கோயம்பேட்டில் இருந்து தினசரி 1950 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும். இந்நிலையில் இன்று 610 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.