fbpx

அசத்தல் அறிவிப்பு…வாகன ஓட்டிகளே இனி இந்த சான்றிதழ் செல்லுபடி ஆகும் காலம் 5 வருடங்கள்…! உயர்த்தி அறிவித்த மத்திய அரசு…!

30 நாட்களுக்குத் தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் வர்த்தக சான்றிதழ் முறையை சீர்படுத்தி, எளிதான புதிய விதிகளை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் படி பதிவு செய்யாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தக சான்றிதழ் தேவைப்படும். அதுபோன்ற வாகனங்களை விற்பனையாளர், தயாரிப்பாளர் அல்லது மோட்டார் வாகனங்களின் இறக்குமதியாளர் அல்லது 126 விதியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனை முகமை மட்டுமே வைத்திருக்க முடியும்.

சாலைப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லாமல் வாகன் (Vahan) தளத்திலேயே வர்த்தக சான்றிதழ் மற்றும் வர்த்தக பதிவு குறியீடுகளுக்கு மின்னணு வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரே விண்ணப்பத்தில் பல்வேறு விதமான வாகனங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். வர்த்தக சான்றிதழ் வழங்குவதற்கான அல்லது புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குத் தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனையாளர் அங்கீகாரங்களை ஒரே சீராக கொண்டு வருவதற்கு, விற்பனையாளர் அங்கீகார சான்றிதழ் (படிவம் 16 ஏ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைகள் அல்லது சேமிப்பு கிடங்குகளில் விற்பனையாளர் அங்கீகார சான்றிதழை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1, 2022 முதல் இந்த விதிகள் அமலுக்கு வரும். தற்போது நிலுவையில் உள்ள வர்த்தக சான்றிதழ்கள், அவற்றின் புதுப்பிப்பு காலம் வரை செல்லுபடியாகும்.

Vignesh

Next Post

மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த பிரபல நடிகை...! உதவி கரம் நீட்டிய தமிழக அரசு...!

Mon Sep 19 , 2022
நடிகை ஜெயக்குமாரிக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். 25 வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஜிதா, பானு என்ற இரண்டு […]

You May Like