ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், போனியார் பகுதியில் உள்ள ஊரி நோக்கிச் சென்ற பயணிகள் வாகனம் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை துரிதமாக தொடங்கிய அதிகாரிகள், உடல்களை மீட்டு, காயமடைந்தவர்களை அவசர மருத்துவ சிகிச்சைக்காக பாரமுல்லா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில், மூன்று நபர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர், அவர்கள் சிறப்பு சிகிச்சைக்காக ஜிஎம்சி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதிவேகம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.