fbpx

‘ஒட்டுமொத்த நகரமும் ஒரே கட்டிடத்தில்..!’ எந்த தேவைகளுக்காகவும் வெளியவே வராத மக்கள்!! ஏன் தெரியுமா?

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் உள்ள ஒரு முழு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது. விட்டியர் என அழைக்கப்படும் நகரத்தில் தான் அந்த கட்டடம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு மாகானத்தில் முழு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?. உண்மை தான். விட்டியர் என அழைக்கப்படும் இந்த நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றனர். இந்த கட்டத்தில் சுமார் 700-க்கும் அதிகமானோர் வசிக்கலாம்.

1956-ல் முதன்முதலாக இந்த கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்த போது அதற்கு ஹாட்ஜ் என பெயரிடப்பட்டது. பிறகு அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து கட்டிடத்தை வாங்கிய பொதுமக்கள் 1972-ல் இதற்கு பெகிச் டவர் என பெயரிட்டனர். பல்பொருள் அங்காடிகள், காவல் நிலையம், கோயில், மருத்துவமனை, தபால் அலுவலகம் என அனைத்துமே இந்த கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் ஒரே கட்டிடத்தில் வாழ்கின்றனர்.

இவர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக ஒரே குடியிருப்பில் வாழ்வதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அலஸ்கா அமெரிக்காவின் வடகோடி மாநிலமாகும். இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும். இது அதிக குளிரான பகுதி என்பதால் பொதுமக்களால் அடிக்கடி வெளியே சென்று வர முடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றனர். 14 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் சுமார் 200 வீடுகள் உள்ளன.

இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்தும் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ளது. இப்பகுதியில் துறைமுகம் உள்ளதால்  மக்களின் வேலைவாய்ப்புக்கும் அது உதவுகிறது. கடும் குளிரை சமாளிக்க பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கட்டிடத்தின் கீழ் சிறப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடும் குளிரில் இருந்து காப்பாறிக்கொள்ள அனைவரும் ஒரே இடத்தில் வசிக்கும் இந்த கட்டிடம் அலஸ்காவின் வரலாற்று சான்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கு பனிப்போர் நடந்த போது இந்த பகுதியில் ராணுவ துறைமுகம் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ராணுவ தளம் அமைக்கப்பட்டு ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் இங்கு நேரத்தை செலவிட தொடங்கினர். இங்கு கடும் பனிப்பொழிவு நிலவும் பகுதி என்பதால் இந்த நகரம் அவ்வப்போது பனியில் மூழ்கிவிடும். இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, 1954 முதல் 1957 வரை இரும்பு மற்றும் கான்கிரீட்டால் இங்கு கட்டிடம் கட்டப்பட்டது.

Read More ; 3 படத்தில் இந்த நடிகர் நடிக்க தடை போட்ட சிம்பு..!! சிவகார்த்திகேயன் செய்த காரியம்..!! தனுஷ் கோபத்திற்கு இதுதான் காரணம்..!!

Next Post

சூர்யகுமார் யாதவ் எந்த தமிழ் நடிகரின் தீவிர ரசிகர் தெரியுமா..? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்..!!

Tue May 28 , 2024
Indian cricket team's action batsman Suryakumar Yadav has chosen his favorite Tamil film hero. Information about this has been widely shared by the actor's fans.

You May Like