கடந்த ஜனவரி 18ம் தேதி திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் ஏரிக்கரை பகுதியில் மனித எலும்புக்கூடுகள் தனித்தனியாக சிதறி கிடந்தன. இதனை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் போலீசார் எலும்புக்கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே சமயம், திருக்கழுக்குன்றம் மாட்டுலாங்குப்பத்தைச் சேர்ந்த சந்திரன் (45) என்பவர் கள்ளத்தொடர்பு பிரச்சினையில் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: சாலவாக்கம், மெய்யூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 27. இவருக்கும், சந்திரன் மனைவி சித்ரா, 40, என்பவருக்கும், இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
கடந்த டிச., 16ல், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய சந்திரன், இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த உல்லாசத்தைப் பார்த்து ஆத்திரமடைந்து, அவர்களை தாக்கியுள்ளார்.
இதையடுத்து, மனைவியும், கள்ளக்கடலனும் சேர்ந்து, சந்திரனை தலையில் அடித்துக் கொன்று, சடலத்தை ஏரியில் புதைத்தனர். தற்போது, இருவரையும் கைது செய்துள்ளோம், என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.