fbpx

மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொன்ற பெண்!… மரண தண்டனை விதித்து தீர்ப்பு!

Court: மத்திய பிரதேசத்தில் மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொலைசெய்த 24 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் அட்ரைலா கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சன் கோல். 24 வயதான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி தனது மாமியார் சரோஜ்(50) என்பவரை 95 முறை அரிவாளால் குத்தி தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்துபோன சரோஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மகன் அளித்த புகாரின்பேரில் மருமகள் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுளது. மேலும், இதற்கு, மாமனார் வால்மிக் கோல் என்பவரும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த ரேவா மாவட்ட நீதிமன்றம், மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக மருமகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் இணை குற்றவாளி என்று கூறப்பட்ட மாமனாருக்கு எதிராக ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Readmore: கோவிலில் இருந்து திரும்பும் போது மணி அடிக்கக்கூடாது!. என்ன காரணம் தெரியுமா?

English Summary

A Madhya Pradesh court has sentenced a 24-year-old woman to death for stabbing her mother-in-law 95 times to death.

Kokila

Next Post

’விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கும் விஜய் கட்சி’..!! புஸ்ஸி ஆனந்த் சொன்ன பரபரப்பு தகவல்..!!

Thu Jun 13 , 2024
Actor Vijay's Tamil Nadu Vetri Kazhagam, which did not contest the Lok Sabha elections, will contest the Vikravandi assembly constituency by-election..? The doubt has arisen.

You May Like