fbpx

கடன் வாங்கியதால் பெண்ணின் மார்பகத்தை வெட்டிய சம்பவம்..!

பீகார் மாநில பகுதியில் உள்ள பாகல்பூர் பிர்பைண்டியில் அசோக் யாதவ் என்பவர் தனது மனைவி நீலம் தேவியுடன் (வயது 40) வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் இந்த தம்பதிகள் கடன் வாங்கி இருந்துள்ளனர். 

சென்ற மாதத்தில் பணத்தை திரும்ப செலுத்துவதில் இருதரப்பிலும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.இந்த சமயத்தில், சம்பவத்தன்று நீலம் தனது மகனோடு சந்தையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார் . அந்த நேரத்தில், அங்கு ஷகீல் தனது சகோதரருடன் சேர்ந்து பிரச்சனை அவருடம் செய்துள்ளனர். 

அச்சமயத்தில் நடந்த வாக்குவாதத்தில் நீலம் தேவியை ஷகீல் மற்றும் சகோதரர் சேர்ந்து கொண்டு பயங்கரமான ஆயுதத்தினால் கோபத்தோடு தாக்கியுள்ளனர். தாக்குதலில் கை-காது மற்றும் மார்பகத்தை வெட்டி இருக்கின்றனர். மேலும் அவரின் கால்களையும் வெட்ட முயற்சித்துள்ளனர். இதனிடையே மக்கள் சம்பவ இடத்திற்கு கூடியதால் இருவருமே அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

இதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட தேவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி கணவர் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

வீட்டிலிருந்த பப்பாளி மரத்தினை தாய் வெட்டியதற்கு சிறுவனின் வியக்கத்தக்க செயல்..!

Tue Dec 6 , 2022
கேரள மாநில பகுதியில் உள்ள திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் அவரது வீட்டில் இருந்த பப்பாளி மரத்தினை வெட்டியுள்ளார். வீட்டிற்க்கு வந்த சிறுவன் உடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி அழுதுள்ளான். பின்னர் மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் தான் கிடைக்கும் என்று தாயை சிறுவன் அழுது கொண்டே திட்டுகிறான். இந்த நிலையில் அழுது […]

You May Like