விசிகவுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளால் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்த இயலவில்லை.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ ஒன்றை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் மதவாத – சாதியவாத சக்திகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு துணை நின்று இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மது போதயைவிட கொடியது மதவாத மற்றும் சாதிய போதை. அதன் காரணமாக மதவாத மற்றும் சாதிய சக்திகளுக்கு அழைப்பு இல்லை.
அதிமுகவும் கூட இந்த மாநாட்டில் இணையலாம் என திருமாவளவன் தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விசிகவுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளால் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்த இயலவில்லை. மாநாடு நோக்கத்தையே மடைமாற்றம் செய்து விட்டனர் என திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர்; மனித வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அக்.2-ம் தேதி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்துகிறோம். மண்டல வாரியாகசெயற்குழு கூட்டத்தில் நான் பேசியபோது நினைவுகூர்ந்ததை வைத்து, அதிகாரத்தில் பங்கு தந்தால் மட்டுமே கூட்டணியில் நீடிப்போம் என்பதுபோல் கொள்கை எதிரிகள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
எந்த நோக்கத்துக்காக மாநாட்டை ஒருங்கிணைத்தோமோ அந்த நோக்கத்தை சிதறடிக்கக் கூடிய வகையில் விவாதங்களை மடைமாற்றம் செய்தது வேதனை தருகிறது. விசிகவுக்கு கொடுத்த நெருக்கடிகளால் மாநாட்டு பணிகளில் போதிய கவனம் செலுத்த இயலவில்லை. இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.