fbpx

“உலகின் பழமையான மொழி தமிழ்” இதை விட பெரிய பெருமை என்ன இருக்க முடியும் -பிரதமர் மோடி…

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பாரிஸில் நடைபெற உள்ள தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக நேற்றைய தினம் பிரான்ஸ் சென்றடைந்தார். அவரை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே விமான நிலையத்தில் வரவேற்றார்.

பாரிஸில் இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றிய பிரதமர் மோடி “உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதை விட பெரிய பெருமை என்ன இருக்க முடியும்” பிரான்சில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும். பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்என்று கூறினார்.

“வெளிநாட்டில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கேட்கும் போது, நான் வீட்டிற்கு வந்துவிட்டதாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி பாரிஸில் தனது உரையைத் தொடங்கினார். மேலும் பேசிய அவர் ” நான் பலமுறை பிரான்ஸ் வந்துருக்கிறேன், ஆனால் இம்முறை எனது வருகை சிறப்பானது. பிரான்ஸ் மக்களுக்கு எனது தேசிய தினம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி. பிரதமர் என்னை விமான நிலையத்தில் வரவேற்றார், ஜூலை 14 எனது நண்பர் இம்மானுவேல் மக்ரோனுடன் தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொள்கிறேன். இது இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான பிரிக்க முடியாத நட்புறவின் பிரதிபலிப்பாகும்.

பருவநிலை மாற்றம், தீவிரவாதம் அல்லது தீவிரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும், உலகம் இந்தியாவையே பார்க்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சின் பெருமையைக் காக்கும் இந்திய வீரர்கள், தங்கள் கடமையைச் செய்யும்போது பிரெஞ்சு மண்ணில் வீரமரணம் அடைந்தனர். இங்கு போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் நாளை தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்தியா ஒரு பிரகாசமான இடம் என்று சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. முதலீடுகளுக்கு இந்தியா நிறைய வாய்ப்புகள் உள்ளது. உக்ரைன் அல்லது சூடான், ஆப்கானிஸ்தான் அல்லது ஈராக் என இருந்தாலும், வெளிநாட்டில் குடியேறிய அனைத்து இந்தியர்களுக்கும் வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள் இந்திய குடிமக்களைப் போலவே எங்களுக்கும் முக்கியம். பிரான்ஸ் அரசின் உதவியுடன் மார்சேயில் புதிய தூதரகத்தை திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று மோடி தெரிவித்தார்.

Kathir

Next Post

புதிய மைல்கல்!... நிலவை நோக்கிய பயணத்தில் சந்திரயான் 3 விண்கலம்!... 25.30 மணிநேர கவுண்ட் டவுன்!... சிறப்புகள் இதோ!

Fri Jul 14 , 2023
இஸ்ரோவின் மைல்கல் திட்டமான சந்திரயான் 3 விண்கலம் இன்று பிற்பகல் 1.05 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதன் சிறப்புகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்தே சந்திரனை ஆய்வு செய்யும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. அந்த வகையில், சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மூன்றாவது முறையாக தனது பயணத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யவுள்ளதால், இஸ்ரோவின் […]

You May Like