fbpx

தொடர்ந்து உல்லாசத்திற்கு அழைத்து தொல்லை கொடுத்த இளைஞர்….! தலையில் ஒரே போடாக போட்ட திருநங்கை, டிரைவருக்கு நேர்ந்த பரிதாபம்….!

சேலம் வாழப்பாடி அருகே சதீஷ்குமார் என்பவர் டிரைவராக சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்ற நிலையில், அயோத்தியாபட்டணம் ராம் நகர் பகுதியை சேர்ந்த நவ்யா என்ற திருநங்கையோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்குமிடையே கள்ளக்காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் தான், நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் திடீரென்று நவ்யாவின் வீட்டுக்கதவை தட்டிய சதீஷ்குமார் அவருடைய நண்பரோடு வந்திருந்தார். பின்னர் தன்னுடைய ஆசை நாயகி நவ்யாவுடன் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் சதீஷ்குமார். அதன் பிறகு தன்னுடைய நண்பனை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு சதீஷ்குமார் மட்டும் தனியாக தன்னுடைய கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்து, அவரை எழுப்பி, தன்னுடன் உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி இருக்கிறார் சதீஷ்குமார். இதனால் ஆத்திரம் கொண்ட அந்த பெண்மணி, அருகில் கிடந்த கட்டையை எடுத்து சரமாரியாக சதீஷை தாக்கியுள்ளார். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, சதீஷ்குமார் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். உடனடியாக அவசர உதவிக்கு தகவல் தெரிவித்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பொதுமக்கள். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலை செய்த நவ்யாவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

’இதை செய்தால் தண்ணீர் பிரச்சனை வராது’..!! காவிரி விவகாரத்தில் புது ஐடியா கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்..!!

Sat Sep 30 , 2023
காவிரி நீரை பெற ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவை எதிர்நோக்கிக்கொண்டே இருக்கக்கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்து தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காவிரி விவகாரம் மக்கள் பிரச்சனையாக உள்ளது. விவசாய பெருமக்களை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் காவிரி நீருக்காக கர்நாடகாவை எதிர்நோக்கிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. […]

You May Like