fbpx

29 வார கருவை கலைக்க அனுமதி கோரிய இளம்பெண்… உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…

29 வார கருவை கலைக்க அனுமதி கோரிய 20 வயது பெண் ஒருவருக்கு பிறக்க வேண்டிய குழந்தையை தத்தெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

29 வார கருவை கலைக்க அனுமதி கோரி 20 வயதாகும் மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் உயிருக்கு ஆபத்து நேராமல் கருவை கலைக்க முடியுமா என்று ஆராய எய்ம்ஸ் மருத்துவர்கள் தலைமையிலான குழுவை அமைக்க வேண்டும் எனவும், அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டனர்.. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் 20 வயது மாணவியை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, சமீபத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.. அப்போது அறுவை சிகிச்சை மூலம் கருவை வெளியே எடுக்கும்போது, உயிருடன் இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

உக்ரைன் மீதான போரை நிறுத்த புதினுக்கு நான் உத்தரவா போட முடியும்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

இதையடுத்து மனுதாரருக்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதியிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.. இந்த ஆலோசனைக்கு பிறகு குழந்தையை பெற்றெடுக்க மனுதாரர் ஒப்புக்கொண்டுள்ளார்.. எனினும் மனுதாரர் பிரசவத்திற்குப் பிறகு குழந்தையை வைத்திருக்க விரும்பவில்லை என்றும் குழந்தையை தத்து கொடுக்க விரும்புவதாகவும் ஐஸ்வர்யா பதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்..

மேலும் குழந்தையை தத்தெடுக்க மனுதாரரின் குடும்பத்தில் யாரேனும் தயராக உள்ளனரா என்பதை தெரிந்துகொள்ள, அந்தப் பெண்ணின் சகோதரியுடன் தொடர்பு கொண்டதாகவும், இருப்பினும், மனுதாரரின் சகோதரி தன்னால் குழந்தையை தத்தெடுத்துக்கொள்ள முடியாது என்று கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.. எனினும் மத்திய குழந்தை தத்தெடுப்பு நல ஆணையத்தில் பதிவு செய்துள்ள ஒரு தம்பதி, மனுதாரரின் குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.. பிரசவத்திற்குப் பிறகு தத்தெடுப்பு செயல்முறையை எளிதாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ” இந்த நீதிமன்றத்தின் முன் தோன்றிய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட, அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் குழந்தையை தத்துகொடுக்க அனுமதி வழங்குறோம்… மத்திய குழந்தை தத்தெடுப்பு நலஆணையத்தின் பதிவுப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வருங்கால பெற்றோர், குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அந்த ஆணையம் எடுக்கும்” என்று தீர்ப்பளித்தனர்..

மேலும் மனுதாரரின் பிரசவம் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படாமல், பிரசவத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு எய்ம்ஸ் இயக்குருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மனுதாரரின் தனியுரிமை பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவரது அடையாளம் வெளியிடப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Maha

Next Post

இனி வாட்ஸ்அப் Chat, Group-ல் இதை செய்யலாம்... விரைவில் புதிய அம்சம் அறிமுகம்...

Sat Feb 4 , 2023
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. பயனர்கள் தங்களின் Chats மற்றும் Whatsapp groups-களுக்குள் செய்திகளைப் பின் செய்யும் […]

You May Like