ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காவிட்டால் அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த நிதி ஆண்டு முதல் (2023-2024) ஒவ்வொரு ஓய்வூதியரும் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் ( Grace Period ) வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும், குடும்ப ஓய்வூதியர் அவரது இணையர் இயற்கை எய்திய நாளுக்கு அடுத்த நாள் எந்த மாதத்தில் வருகின்றதோ அந்த மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் ( Grace period) வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த நிதி ஆண்டை பொருத்தமட்டில் கருவூல கணக்குத் துறை ஆணையர் அவர்களின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் 01/07/2023 முதல் 31/03/2024 க்குள் எந்த நாளில் வாழ்நாள் சான்றிதழ் அளித்தாலும் அது 2023 – 2024 ம் நிதி ஆண்டுக்கான வாழ்நாள் சான்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நிதி ஆண்டு முதல் (2024- 2025) ஒவ்வொரு ஓய்வூதியரும் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் (Grace Period ) வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும்.
மேலும் குடும்ப ஓய்வூதியர் அவரது இணையர் இயற்கை எய்திய நாளுக்கு அடுத்த நாள் எந்த மாதத்தில் வருகின்றதோ அந்த மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் ( Grace period) வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும் தகவலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு வாழ்நாள் சான்று அளிக்காத பட்சத்தில்; Grace Period க்கு அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும் எனவும் தகவலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.