fbpx

தேர்தலில் வெற்றிபெற குறுக்கு வழியை மேற்கொள்ளும் பாஜக.? கைதான பாஜக நிர்வாகி.!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகராட்சியில் சோபாரி ஜெயஸ்ரீ என்பவர் 13 வது வார்டு பாஜக கவுன்சிலராக இருக்கிறார். இவரது கணவர் வேணுவும் பாஜக நிர்வாகி தான். நேற்று வேணு காரில் பயணம் செய்த போது தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இருக்கின்றனர்.

மூணுகோடு பகுதியை நோக்கி அந்தப் பணத்தை குண்டூரில் இருந்து அவர் எடுத்துச் சென்றுள்ளார். மூனுகோடு சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் பாஜக சார்பில் கோமதி ரெட்டி என்ற வேட்பாளர் போட்டியிடுகின்றார். தொகுதி முழுவதும் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக வழிகாட்டுதல் குழு தலைவராக இருக்கும் விவேக் வெங்கடசாமி என்பவரின் அறிவுறுத்தலால் வேணு ஒரு கோடியை அந்த பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இந்த பணமானது வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Rupa

Next Post

பேருந்து கட்டணம் உயருகிறதா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Tue Oct 18 , 2022
பெங்களூருவில் கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர், “கர்நாடக மாநிலத்தில் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் திட்டத்தை மாநில அரசு கையில் எடுத்துள்ளது. விரைவில் இது குறித்த அவசர சட்டம் இயக்கப்படும். மேலும், கர்நாடக மாநிலத்தில் புதிதாக நான்காயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஒன்பது லட்சம் கிலோ மீட்டர் வரை ஓடிய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட உள்ளது. இது […]
’இது லிஸ்ட்லயே இல்லையே’..!! அரசுப் பேருந்தில் லேப்டாப் வைத்திருந்ததால் ரூ.10 கூடுதல் கட்டணம்..!!

You May Like