fbpx

அக்டோபர் 14ஆம் தேதி வங்கக் கடலில் சம்பவம் இருக்கு..!! இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

அக்.14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுபெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 13ஆம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அனேக இடங்களிலும் திருப்பூர், கோவை, மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 15-ம் தேதி ( ஆரஞ்சு அலர்ட்) சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்டோபர் 14ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read More : இனி ஆதார் அட்டை பெற இவரின் ஒப்புதல் வேண்டும்..!! அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை..!!

English Summary

The India Meteorological Department has informed that a low pressure area is expected to form on October 14.

Chella

Next Post

மதிய உணவில் நீங்கள் செய்யும் தவறால் உடல் எடை கூடும் அபாயம்..!! இந்த நேரத்திற்கு சாப்பிட்டால் எடை குறையும்..!!

Sat Oct 12 , 2024
When you eat, your biological clock will work properly if you eat at the right time.

You May Like