fbpx

குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருது கிடையாது…! பள்ளி கல்வித்துறை அதிரடி…!

குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது கிடையாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும். இந்த விருது பெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு ரூ.10 லட்சம் ஊக்க நிதியும் தரப்படும். இதற்காக ரூ.10.03 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், விருதுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்ய மாநில, மாவட்ட அளவில் தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பரிந்துரைகளை மாநிலக் குழுவுக்கு ஜன.20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை பரிந்துரைக்கக் கூடாது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 50 என 100 தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட விருது குழுவினர் பல்வேறு செயல்பாடுகளுக்கு மொத்தம் 500 மதிப்பெண்களை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் பட்டியலை தயார் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!… அபராதமின்றி செலுத்தலாம்!… அமைச்சர் தகவல்!

Sun Dec 31 , 2023
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அபராமின்றி மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜனவரி 2 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி […]

You May Like