fbpx

தமிழகமே..! இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது…!

இன்று தமிழகம் முழுவதும் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலகமும் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாய் பெருக்கும் நோக்கிலும் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட வேண்டும் என கடந்த மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலகமும் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவு விதி-4-க்கு உட்பட்டு பதிவுச் சட்டத்தில் கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்பட வேண்டும். மேலும் அன்றைய தினங்களில், ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான Help Desk மற்றும் Help Line வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட M/s TCS மென்பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

English Summary

There is no holiday for deed registration offices today.

Vignesh

Next Post

சென்னையில் இனி அனைத்து வாடகை வாகனங்களிலும் QR குறியீடு..!! ஸ்கேன் செய்த உடனே ஸ்பாட்டுக்கு வரும் போலீஸ்..!! இன்று முதல் அமல்..!!

Sat Mar 8 , 2025
In Chennai, it has been made mandatory to affix QR codes on rental vehicles including taxis and autos.

You May Like