fbpx

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…! பணி மாறுதலுக்கு இந்த 8 ஆவணம் கட்டாயம்…!

ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அல்லது நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம்.

பள்ளிக்கல்வித்துறையிலிருந்து தொடக்கக் கல்வித் துறை, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்புத் துறை, ஆதிதிராவிட நலத் துறை மற்றும் இதரத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டும். தடையின்மைச் சான்றுக்கு விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலகு,துறை மாறுதல் கோரும் விருப்ப கடிதம். தற்போது வகிக்கும் பதவியில் வழங்கப்பட்ட பணிநியமன ஆணை பதவி உயர்வு ஆணை நகல், தற்போது வகிக்கும் பதவியில் தகுதிகாண் பருவம் முடிந்த ஆணை நகல் உள்பட 8 ஆவணங்கள் இணைத்து அனுப்பபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆண்டுக்கு ரூ.7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வருமான வரி விலக்கு...! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...!

Sat Jul 15 , 2023
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், நரேந்திர மோடி அரசாங்கம் நடுத்தர வர்க்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது, ஆண்டுக்கு ரூ.7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டபோது, சில இடங்களில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசின் […]
கச்சா எண்ணெய் விலை உயர்வு..! இந்தியாவில் நிச்சயம் தாக்கம் இருக்கும்..! மத்திய அமைச்சர்

You May Like