fbpx

இதய நோய் மற்றும் பக்கவாதத்திலிருந்து தப்பிக்க இந்த ஐந்து உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்க போதும்.!?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கங்களும், சரியான வாழ்க்கை முறை இல்லாததாலும் பலருக்கும் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் பெருகி வருகிறது. மேலும் தற்போது அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய இதய நோயால் ஏற்படும் பக்கவாதத்தை கட்டுப்படுத்தக்கூடிய உணவுகளை குறித்து பார்க்கலாம்?

1. கீரைகள் மற்றும் இலை காய்கறிகள்
கீரைகள் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றில் உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக நரம்பு மற்றும் இதயத்தை பாதுகாக்கும் போலேட் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பக்கவாத நோயிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.
2. சால்மன், மத்தி, கெளுத்தி போன்ற ஒமேகா 3 கொழுப்பு சத்து கொண்ட மீன் வகைகளை உண்பதன் மூலம் இதயத்தை பாதுகாத்து பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கலாம்.
3. பாதாம், பூசணி விதைகள், ஆளி விதைகள், தர்பூசணி விதைகள், அக்ரூட் பருப்புகள் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கலாம்.
4. ஓட்ஸ், சோளம், திணை, கம்பு, கேழ்வரகு,  முழு தானியங்கள் மற்றும் பழுப்பு அரிசி போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து இதய நோய் பாதிப்பு ஏற்படாது. இதனால் உடலில் பக்கவாதம் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
5. ஆக்சிஜனேற்றம் நிரம்பிய பழங்களான ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி, அவுரி நெல்லிகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் இதய நோயை தடுத்து நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

Baskar

Next Post

ஆண்மை குறைபாட்டை சரி செய்யும் வாழைப்பூ.! வேறு என்னென்ன நோய்களை குணப்படுத்தும்.!?

Tue Feb 13 , 2024
பொதுவாக வாழை மரத்தின் தண்டு, இலை, காய், பழம், பூ என அனைத்துமே ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக வாழைப்பூ பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பண்பு நிறைந்ததாக உள்ளது. வாழைப்பூவில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவை […]

You May Like