fbpx

தமிழகமே…! திட்டங்களை நடைமுறைப்படுத்த இவர்களுக்கும் பொறுப்பு…! அரசு அதிரடி உத்தரவு…!

திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பணிகளும், பொறுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட தொடக்கக்‌ கல்வி அலுவகைத்திற்கு பணி அமர்த்தப்பட்டுள்ள உதவித்‌ திட்ட அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உரிய இடம்‌ ஒதுக்கீடு செய்து தருதல்‌ வேண்டும்‌. இருக்கைகள்‌, கணினி தொடர்பான சாதனங்கள்‌ இவர்களுக்கு பெற்றுத்‌ தருதல்‌ வேண்டும்‌.

இல்லம்‌ தேடிக்‌ கல்வி, எண்ணும்‌ எழுத்தும்‌, முன்பருவக்‌ கல்வி, தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளிலுள்ள ஒன்று முதல்‌ ஐந்தாம்‌ வகுப்பு வரை பணிபுரியும்‌ ஆசிரியர்களுக்கான பணியிடைப்‌ பயிற்சிகள்‌ ஆகிய திட்டக்‌ கூறுகள்‌ தொடர்பான செயல்பாடுகளில்‌ உதவி திட்டஅலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளரை ஈடுபடுத்த வேண்டும்‌.

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி சார்ந்த அலுவகை கோப்புகள்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ (தொடக்கக்‌ கல்வி) வழியாக முதன்மைக்‌ கல்வி அலுவலரின்‌ ஆணைக்கு அனுப்ப வேண்டும்‌. இல்லம்‌ தேடிக்‌ கல்வி, எண்ணும்‌ எழுத்தும்‌, முன்பருவக்‌ கல்வி, தொடக்க மற்றும்‌ நடுநிலை பள்ளிகளிலுள்ள ஒன்று முதல்‌ ஐந்தாம்‌ வகுப்பு வரை பணிபுரியும்‌ ஆசிரியர்களுக்கான பணியிடைப்‌ பயிற்சிகள்‌ ஆகிய திட்டக்‌ கூறுகள்‌ தொடர்பாக பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌,மாநிலதிட்ட இயக்குநர்‌, தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சியர்‌ நடத்திடும்‌ ஆய்வு கூட்டங்களில்‌ உதவி திட்ட அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின்‌ பணியை பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

நமீபிய சிறுத்தைக்கு பிறந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு...!

Fri May 26 , 2023
குனோ தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தை குட்டிகள் மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் “வெப்பம் மற்றும் உடல் பலவீனம் காரணமாக வியாழன் அன்று இறந்ததாக, அதிகாரிகள் கூறியுள்ளனர். மார்ச் 24 அன்று நமீபிய சிறுத்தைக்கு பிறந்த குட்டிகள், தாய் மற்றும் குட்டிகள் வசிக்கும் வேலி பகுதியில் வெளிப்படையான நீரிழப்பு மற்றும் உடல் […]

You May Like