அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.. இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58,4438,252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது புகார் எழுந்துள்ளது.. இதுகுறித்து காமராஜ், டாக்டர் இனியன், டாக்டர் இன்பன், சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு நேற்று செய்துள்ளது.. இந்த வழக்கினை தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்..
இதனிடையே, காமராஜ் மற்றும் அவரின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.. மேலும் அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்..
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காமராஜ் வீட்டில் நடைபெறும் லஞ்சஒழிப்பு துறை சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ புடம் போட்ட தங்கமாக அதிமுக இருக்கிறது.. வழக்குகள் மூலம் அதிமுகவை ஒழித்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.. ஆனால் பூனை பகல் கனவு காண்பது போன்றது.. இன்று முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.. எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதிமுக தகர்த்தெறியும்.. அமைச்சர் காமராஜ் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை கண்டனத்திற்குரியது.. லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான சோதனைகளுக்கு நீதிமன்றத்தில் நீதி நிலைநாட்டப்படும்.. 2024, 2026 பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்..” என்று தெரிவித்தார்