fbpx

“மாப்பிள்ளை ரொம்ப கருப்பா இருக்காரு..” தாலி கட்டும் முன்பு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்…

நாடு முழுவதும் திருமண சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பல்வேறு காரணங்களுக்காக மணப்பெண்கள் தங்களுடைய திருமணத்தை நிறுத்தும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன… அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் ஒரு திருமணத்தில் மணமகன் கருப்பாக இருப்பதாக கூறி மணப்பென் திருமணத்தை நிறுத்தி உள்ளார்.. மணமகள் நீதா யாதவ் ரவி யாதவ் இருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.. திருமண சடங்குகள் தொடங்கி, இருவரும் மாலை மாற்றிக்கொண்ட நிலையில் திடீரென திருமணத்தை நிறுத்துவதாக மணப்பெண் அறிவித்தார்.

தனக்கு ஏற்கனவே காட்டப்பட்ட மாப்பிள்ளை, இவர் இல்லை என கூறி ‘மண்டபத்தை’ விட்டு வெளியேறி உள்ளார்.. மணமகளின் குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.. மணமகளை சமாதானப்படுத்தும் முயற்சிகள் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தன.. ஆனாலும் மணமகள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பின்னர் மணமகனும் வேறு வழியின்றி அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்..

இதைத் தொடர்ந்து மணப்பெண்ணுக்கு பரிசாக வழங்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், தங்களிடம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்று மணமகனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த மணமகளும் அவரது குடும்பத்தினரும் தன்னை பலமுறை சந்திக்க வந்ததாகவும், அவர்கள் ஏன் திடீரென்று தங்கள் மனதை மாற்றிக்கொண்டார்கள் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் மணமகன் ரவி தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

அடுத்த ஆபத்து.. புதிதாக பரவும் ‘ஆசிட் ஈ’ தொற்று... 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு...

Fri Jul 8 , 2022
சமீபத்தில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிட் பூச்சி அல்லது நைரோபி ஈ உடன் தொடர்பு கொண்டதால் கடுமையான தோல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டனர். நைரோபி ஈ பூச்சி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு இப்போது குணமடைந்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளனர் டார்ஜிலிங், சிக்கிம், மேற்குவங்கம் […]

You May Like