பொதுவாக நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள், சாப்பிட்ட உடன் தூங்க கூடாது செரிமானம் ஆகாது என்று கூறுவார்கள்… ஆனால் நாம் அதை கேட்பது இல்லை. நீ என்ன டாக்டரா என்று எதிர்த்து கேட்டு விட்டு ஆழ்ந்த தூக்கத்திற்கு போய் விடுவோம். அப்படி தூங்கவில்லை என்றால் நாள் முழுவதும் துக்கமாகவே இருப்பார்கள்.. ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று. தூக்கம் மட்டும் இல்லை, சாப்பிட்ட உடன் செய்ய கூடாத விஷயங்கள் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சிலவற்றை பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
நாம் சாப்பிட்ட உடன் தூங்காதே என்று சொன்னால், நான் தூங்கவில்லை சும்மா படுத்து மட்டும் தான் இருக்கிறேன், என்று சில அறிவாளிகள் கூறுவது உண்டு. ஆனால் அதுவும் தவறு தான். உணவுக்குப் பின், சாப்பிட்ட இடத்திலேயே படுத்துக் கொள்வது, ஒரே இடத்தில் உட்காருவதும் தவறு. இந்த ஓய்வு, உங்களின் செரிமானத்தை மெதுவாக்கி, அஜீரணத்தையும் ஏற்படுத்தும். இதனால் உடலில் கலோரிகள் எரிக்கப்படாமல் அப்படியே தங்கிவிடும். இதன் காரணமாக, உங்கள் உடலின் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்க்கு பதிலாக, சாப்பிட உடன் மெதுவான நடைபயிற்சி அல்லது லேசான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது நல்லது.
சிலருக்கு சாப்பிட்ட உடன் எப்படியாவது சிகரெட், பீடி போன்றவை கொண்டு புகை பிடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்களால் நிம்மதியாகவே இருக்க முடியாது. காலில் வெந்நீர் ஊற்றியது போல் இருப்பார்கள். பொதுவாகவே புகைபிடிப்பது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவுக்கும் என்றாலும், உணவு உண்ட உடனே புகை பிடிப்பது மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். சாப்பிட்ட உடன் புகை பிடிப்பது, நீங்கள் 10 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
சிலர் சாப்பிட்ட உடன் குளிப்பது உண்டு. இதுவும் மிக தவறான ஒன்று. சாப்பிட்ட பின் குளிப்பது செரிமானத்தில் தாமதத்தை ஏற்படுத்தும். ஏனெனில், சாப்பிட்ட பின் செரிமானத்துக்கு தேவையான இரத்தம், நீங்கள் குளிப்பதால் உடலின் மற்ற பகுதிகளுக்கு சென்று விடும். இதனால் செரிமானம் தாமதமாகிவிடும். இதனால் சிலருக்கு சாப்பிட்ட உடன் குளிப்பது குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடும்.
சாப்பிட்ட உடன் காபி, டீ குடித்தாலும், நமது உடல் இரும்புச் சத்து உறிஞ்சலைத் தடுக்கும். இதனால் உணவு எடுத்துக் கொள்ள ஒரு மணி நேரம் முன்னும், பின்னும் காபி, டீ குடிக்காமல் இருப்பது உங்கள் செரிமான ஆரோக்கியத்துக்கு நல்லது. அர்கே சமயம், சாப்பிட்ட உடனே அதிக அளவில் தண்ணீரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சாப்பிட்ட உடன் இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது உங்கள் ரத்த சர்க்கரை அளவு விரைவில் அதிகரித்து விடும்.
Read more: இந்த எண்ணெய் தேய்த்து பாருங்க.. கட்டாயம் இனி உங்களுக்கு ஹேர் டையே தேவைப்படாது..