திருச்சியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.
திருச்சி அருகே உள்ள கிராமப்புறத்தைச் சார்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார் ஒரு இளைஞர். இதனையடுத்து அந்த மாணவி இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கவே அவர், குழந்தையின் பெற்றோர்களிடம் இது பற்றி தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருவெறும்பூா் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதன் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை மணிகண்டம் பகுதியைச் சார்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் அஜித் (22) என்பவரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையின் போது அவர் சிறுமிக்கு அவர் 4-ஆம் வகுப்பு படிக்கும் போது இருந்தே கடந்த ஓர் ஆண்டாகவே பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிந்திருக்கிறது. மேலும் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி உட்பட பல பேருக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.