fbpx

மனைவி கொடுமை…! முறையாக திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு மட்டுமே இது பொருந்தும்…! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

மனைவியை கொடுமை செய்யும் நபர்களுக்கு தண்டனை அளிக்கும் 498 ஏ சட்டப் பிரிவு லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழும் ஜோடிக்குப் பொருந்தாது. முறையாக திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.

1997 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது நபருடன் ஓடிப்போன பிறகு, தனக்கு நேர்ந்த கொடுமை மற்றும் துன்புறுத்தல் காரணமாக தீக்குளித்து அந்த பெண் உயிரிழந்தார். பின்னர் IPC பிரிவுகள் 498A மற்றும் 306 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு சார்பாக கைது செய்தனர். ஆண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

1998 ஆம் ஆண்டு செஷன்ஸ் நீதிமன்றம், தம்பதியினர் ஒன்றாக வாழத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு அந்த பெண் தற்கொலை செய்துகொண்டதால், குற்றவாளி என தீர்ப்பு வழங்கி தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். மனைவியை கொடுமை செய்யும் நபர்களுக்கு தண்டனை அளிக்கும் 498 ஏ சட்டப் பிரிவு லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழும் ஜோடிக்குப் பொருந்தாது. முறையாக திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Vignesh

Next Post

10 புதிய எண்ணெய் கிணறுகள்...! அரியலூர் பாலைவனம் ஆகிவிடும்...! எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்...!

Sun Oct 22 , 2023
10 எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டால் அரியலூர் மாவட்டம் பாலைவனம் ஆகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி எனப்படும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. பொன்விளையும் பூமியான அரியலூர் மாவட்டத்தை சீரழிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. தஞ்சாவூர், […]

You May Like