கொரோனாவின் தோற்றத்தை கண்டுபிடிப்பது, எதிர்கால தொற்றுநோய்களை தடுக்க உதவும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனாவின் உஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன..
இந்நிலையில் கொரோனாவின் தோற்றத்தை கண்டுபிடிப்பது ஒரு தார்மீக கட்டாயம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கொரோனா நெருக்கடி தொடங்கிய இந்த 3 ஆண்டுகளில், பலர் உயிரிழந்துள்ளனர்.. நீண்டகால கோவிட் பாதிப்பு காரணமாக இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. கொரோனாவின் அனைத்து ஆய்வுகள் மற்றும் அனுமானங்களும் ஆராயப்பட வேண்டும். வைரஸ் எவ்வாறு உருவானது என்பதைக் கண்டுபிடிப்பதில் உலக சுகாதார அமைப்பு உறுதியாக உள்ளது. இது எதிர்கால தொற்றுநோய்களை தடுக்க உதவும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..
முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு அமைத்த குழு சீனாவின் உஹான் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் ஆய்வு செய்தது.. அந்த ஆய்வுக்கு சீனா பல கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், இதுகுறித்து கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.. அதே நேரம் எந்த கூடுதல் ஆய்வுகளும் தேவையில்லை என்று சீனா தெரிவித்தது.. எனவே கொரோனா தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து இன்னும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்றும் முக்கிய தரவுகள் காணவில்லை உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
மறுபுறம் தங்கள் நாட்டின் ஆய்வகங்களில் இருந்து வைரஸ் கசியவில்லை என்று மறுத்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே தோன்றியதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் சில விஞ்ஞானிகள், வைரஸ் இயற்கையாகவே தோன்றி இருக்கலாம் என்றும், ஒரு விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..