தெலங்கானாவில் ஆசிரியர் ஒருவர், பள்ளி நேரத்தில் திருமணம் ஆன பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை கண்ட கிராம மக்கள், அவரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ். இவர், அதே ஊரில் வசித்து வரும் திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. பள்ளி நேரத்தில் அந்த பெண்ணுடன் ராமதாஸ் அடிக்கடி உல்லாசமாக இருப்பாராம்.
இதனையறிந்த கிராம மக்கள், ஆசிரியர் ராமதாஸை பள்ளியில் இருந்து இழுத்து வந்து, மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து ஆசிரியர் ராமதாஸை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பாடம் சொல்லித்தர வேண்டிய ஆசிரியர் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆசிரியரை கிராம மக்கள் அடித்து துவைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Read More : சர்ச்சையை கிளப்பிய த்ரிஷா..!! முடிவுக்கு வரும் விஜயின் அரசியல் பயணம்..!! இப்படி சொல்லிட்டாரே..!!