விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டு வருகின்றன. இதில், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை 13,155 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வி.எஸ். நந்தினி 5,066 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இவர், தாரகையை விட 8,089 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் யு.ராணி 941 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெமினி 903 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
Read More : Lok Sabha election 2024: மக்களவைத் தேர்தல் தற்போதைய நிலவரம்..! தனித்து ஆட்சி அமைக்குமா பாஜக..!