கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது
கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே ஆந்திரா மற்றும் கர்நாடகாவில், குரங்கு அம்மை அறிகுறிகளுடன் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்களின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் குரங்கு அம்மையின் நிலைமையைக் கண்காணிக்கவும், அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கவும், நோய் கண்டறிதல் வசதிகள் மற்றும் சாத்தியமான தடுப்பூசிகள் பற்றிய ஆராய்ச்சியை மேம்படுத்தவும் ஒரு பணிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.. கடந்த 27-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 30 வயது நபர் கேரளா வந்துள்ளார்.. அவருக்கு குரங்கு அம்மையின் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டிருந்தது.. இந்நிலையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதியாகி உள்ளது.. அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதனால் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது..