fbpx

தங்கும் விடுதி என்ற பெயரில் போதை பொருள் சப்ளை செய்த இளம் பெண் உட்பட மூன்று பேர் அதிரடி கைது……!

தற்போதையெல்லாம் தங்கும் விடுதி என்ற பெயரில் விபச்சாரம், போதை பொருள் விநியோகம் செய்வது உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களை செய்வது வாடிக்கையாகி வருகிறது.பலமுறை, பல இடங்களில் இது போன்ற பகுதிகளில், காவல்துறையினர் சோதனை நடத்தி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இது போன்ற செயல்கள் தொடர்ந்து, நடந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அந்த வகையில், கேரள மாநிலம் கொச்சி பகுதியில் சுல்தானா(33 ) என்ற பெண், பெண்கள் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த விடுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்களும் சிறுமிகளும் படிப்பதற்காக வாடகை கொடுத்து தாங்கி வருகிறார்கள். ஆலப்புழாவை பூர்வீகமாகக் கொண்ட சுல்தானாவுக்கு போதை பொருளை விநியோகம் செய்யும் கும்பலுடனும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆகவே போதைப் பொருளையும் விடுதியில் தங்கி இருந்த பெண்களுக்கு விநியோகம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. அத்துடன் அந்த விடுதிக்கு சில ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும் காவல்துறையினருக்கு ரகசியமான தகவல்களைத் தவிர இந்த ரகசிய தகவலின் படி கொச்சி நகர காவல் துறை ஆணையர் சேதுராமன் உத்தரவிட்டதன் அடிப்படையில், காவல்துறையினர் அந்த விடுதியில் அதிரடி சோதனையை நடத்தினர்.

அந்த அதிரடி சோதனையில் அந்த விடுதியில் தங்கி இருந்த சிறுமி ஒருவருக்கு போதை பொருள் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே அந்த சிறுமிக்கு போதை பொருள் வழங்கிய 19 வயதான 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அந்த விடுதியை நடத்தி வந்தவரும், அங்கு தங்கி இருக்கும் பெண்களுக்கு போதை பொருட்களை செய்ய உதவியாக இருந்தவருமான சுல்தானா கைது செய்யப்பட்டார்.

அந்த விடுதியில் இருந்து கைது செய்யப்பட்ட எல்லோரின் மீதும் போக்சோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, அந்த விடுதியில் தங்கியிருந்த அனைத்து பெண்களையும் போதை பழக்கத்திற்கு உள்ளாக்கியதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் அந்த பெண்களுக்கு வேறு ஏதாவது, பாலியல் தொந்தரவு ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

மணிப்பூர் கலவரம் குறித்து இதுவரையில் எத்தனை எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது….? உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி……!

Mon Jul 31 , 2023
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் இன்று முதல் தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. மேலும், இந்த கலவரத்தை ஒரு காரணமாக, வைத்துக்கொண்டு, பல்வேறு சட்டவிரோத செயல்களும், மனித உரிமை மீறல்களும் அந்த மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அதோடு, கடந்த மே மாதம் 4ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் […]

You May Like