மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் மூன்று பெண்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தீஸ்வர் கிராமத்தைச் சார்ந்த சகோதரிகளான சங்கீதா மாலி மற்றும் பிரபாய் மாலி ஆகியோர் தங்களது சகோதரருடன் வசித்து வந்திருக்கின்றனர். நேற்று மாலை 5 மணி அளவில் தங்களது வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவரால் தலையில் கல்லை தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட மூன்றாவது பெண் அந்த சகோதரிகளின் அண்ணனின் மருமகளான தீபா மாலி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெளிவாக தெரியவில்லை
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் மாலை வேளையில் வீட்டு அருகிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.