பெண்களுக்கு இயற்கையாக இருக்கும் அழகை விட, மேலும், அழகு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தற்போது கெமிக்கல் கலந்த பல்வேறு பொருட்களால், செய்யப்பட்டு வரும் பேஷியல் காரணமாக, சில நேரம் சர்ம அலர்ஜி உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே, துளசி உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்தால், எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துளசி இலையில், இருக்கின்ற ஆன்ட்டிசெப்டிக் தன்மை காரணமாக, சரும பிரச்சனைகள் குறைவதோடு, முகத்தில், முகப்பருக்கள், தழும்புகள் போன்றவை இல்லாமல் போய்விடும். துளசி இலையை நன்றாக அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, 15 நிமிடம் முகத்தில் பூச வேண்டும். அதன் பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் என்று கூறப்படுகிறது.
வாரத்திற்கு இருமுறை இப்படி செய்தால், முகத்தில் இருக்கின்ற எண்ணெய் பசை நீங்குவதுடன், முகம் பளபளப்பாக காணப்படும். அதோடு, இதன் காரணமாக, எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிட்டத்தக்கது.