சென்ற ஜனவரி மாதம் 11-ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களான துணிவு மற்றும் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகினர். ஆகவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குக்கு சென்று அந்த திரைப்படங்களை கொண்டாடத் தொடங்கினர்.
2 திரைப்படங்களும் 200 கோடிக்கும் மேலாக நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது .இன்னும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆகவே இந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் தற்போதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
ட்விட்டரில் ஒரு பிரபலம் மதுரையில் துணிவு திரைப்படம் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் விஜயின் வாரிசு திரைப்படம் மெயின் ஸ்கிரீனில் ஒளிபரப்பாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் மதுரையில் துணிவு திரைப்படத்தை விநியோகம் செய்த பிரபலம் மதுரையில் அனைத்து திரைப்படத்தை விடவும் துணிவு திரைப்படம் தான் அதிக வசூல் சாதனை படைத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.