காய்கறிகள் என்றாலே ஆரோக்கியமானது தான். காய்கறிகளில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அதிலும் குறிப்பாக நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் கேரட்டில் பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆம், கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை சேதமடையாமல் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.
மேலும், செரிமானத்தை மேம்படுத்த கேரட் பெரிதும் உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பது மட்டும் இல்லாமல், இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் பி8, வைட்டமின் கே, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
இதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும், உடல் எடையை குறைக்க முடியும். கேரட்டை பொரியலாக சமைத்து சாப்பிடுவது நல்லது தான். ஆனால், நாம் கேரட்டை ஜூஸாக குடிக்கும் போது பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, கேரட் ஜூஸில் உள்ள பீட்டா கரோட்டின், தேங்காய் பாலுடன் சேரும் போது, சரும செல்களை சேதமடையாமல் முகப்பொழிவாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் .
மேலும், கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், கண் தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் குணமாகும். மேலும், இதனால் இதய கோளாறுகள் ஏற்படுவதை தடுக்க முடியும், அது மட்டும் இல்லாமல் பிபி கட்டுக்குள் இருக்கும். கேரட் ஜூஸில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பது பல நன்மைகளை தரும்.
ஆனால் நாம் கேரட் ஜூஸ் அதிகமாக குடிப்பதால், கரோட்டினீமியா என்ற நிலை ஏற்பட வாய்புகள் அதிகம். அதாவது, நமது தோல் மஞ்சள் நிறமாக மாறும்.