fbpx

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்….! கூலிப்படையை வைத்து கொலை செய்யப்பட்ட டெய்லர்…!

எல்லோருக்கும் நிச்சயமாக பாதகமான காலம் என்பது வரும் அப்படி பாதகமான காலங்களில் நமக்கு உதவி புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடைசி வரையில் மறக்கக்கூடாது, அதுதான் மனித பண்பு.

அப்படி உதவி புரிபவர்கள் பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்தினாலும் சரி, அல்லது நமக்கு எந்த விதத்தில் உதவி புரிந்தாலும் சரி உதாரணத்திற்கு ஒருவர் பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்துகிறார் என்றால், அவரிடம் நாம் கடம் பெற்று நம் வாழ்க்கையை முன்னேறிக் கொள்கிறோம். ஆனால் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வட்டியுடன் சேர்த்து நாம் கொடுக்க வேண்டும்.

அந்த நபர் நம்மிடம் வட்டியை வாங்குவது அவருடைய தொழில், நமக்கு உதவ வேண்டும் என்று அவர் நினைத்தது அவருடைய மனித பண்பு இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்துள்ள நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). திருவண்ணாமலை திருவூடல் தெருவில் டைலர் கடை நடத்தி வருகிறார் ஆறுமுகம் இவர் கடந்த 7ம் தேதி இரவு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென்று அவரை இடை மறித்து சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். அதன் பிறகு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்று விட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் மூலமாக, கொலையாளிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த நிலையில், இந்த கொலை குறித்து கார் ஓட்டுநர் பரந்தாமன்( 38) என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கிறது.

அதாவது, டெய்லரான ஆறுமுகத்திடம் கடந்த 2016 ஆம் வருடம் பரந்தாமன் 10 லட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்கியதாகவும் அதனை திருப்பி கேட்டு அடிக்கடி அவர் தொந்தரவு வழங்கியதால் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்ததாக பரந்தாமன் தெரிவித்திருக்கிறார்.

கார் ஓட்டுநர் பரந்தாமன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூலிப்படையாக செயல்பட்ட கார் ஓட்டுநர் பாரதி (21), கல்லூரி மாணவர் தமிழரசன் (20), ஸ்ரீகாந்த் (20) உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புள்ள மேலும் 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Post

தனிமையான இடத்திற்கு சென்ற காதலர்கள்….! சுற்றி வளைத்த மர்ம கும்பல் காதலிக்கு ஏற்பட்ட கொடூரம்….!

Fri Jan 13 , 2023
சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரவில் காவல் துறையினர் ரோந்து பணியை மேற்கொள்வதில்லை எனவும், இதன் காரணமாக, அந்த வழியாக இரவில் செல்லும் நபர்களிடம் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்டவை அதிகம் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். அதேபோல சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காதலர்கள் சந்தித்து பேசும்போது, அவர்களிடம் கொள்ளை முயற்சியில் சில மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் […]

You May Like