பாஜக உடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தாமாக(TMK) இளைஞர் அணி தலைவர் யுவராஜ் எடப்பாடி பழனிச்சாமி ரகசியமாக சந்தித்துள்ளார்.
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக அதன் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார்
பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளின் தொடக்கத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வந்தார் ஜிகே வாசன். மேலும் அவர் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக மீண்டும் இணைவதற்கு தூதராகவும் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அவர் இன்று அறிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியுடன் வாசன் கூட்டணி அமைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் இன்று அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி இருக்கிறார். பாஜகவின் பக்கம் வாசன் சென்றுள்ள நிலையில் அதிமுக பக்கம் சாய்ந்திருக்கிறார் இளைஞர் அணி தலைவர் யுவராஜ்.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடி இல்லாத காரில் வந்து எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணை இருக்கிறாரா.? என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.