fbpx

8-வது படிச்சு இருக்கீங்களா.? 58000/- ரூபாய் சம்பளம் வரை…! தமிழ்நாடு அரசு வேலை ரெடி.! உடனே அப்ளை பண்ணுங்க.!

தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் 05..01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசின் குற்ற வழக்கு தொடர்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஊதியமாக Rs.15,700 முதல் Rs.58,100/- வரை வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடைய நபர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை தபால் மூலமாக அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை. மேலும் நேரு முக தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவித்திருக்கிறது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு 18 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிழை இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை இயக்குனர், குற்ற வழக்கு தொடர்வு துறை, நம்பர்.5, காமராஜர் சாலை,சென்னை – 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் இந்த வாய்ப்பினை பற்றிய மேலதிக விவரங்களை அறிய chennai.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

வங்கி டெபாசிட்!… புதிய விதிகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

Thu Jan 4 , 2024
உரிமை கோரப்படாத டெபாசிட் தொகைகளை திரும்பப் பெறுவதற்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வங்கி அமைப்பில் வசூலிக்கப்படாத டெபாசிட்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. வங்கிகளுக்கு வழிகாட்டும் சில விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த வைப்புத்தொகையை சரியான உரிமையாளர்கள் பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். தற்போதைய விதிகளின்படி, வங்கிகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத டெபாசிட் கணக்கிலிருந்து அல்லது நீண்டகாலமாக கோரப்படாத தொகையை […]

You May Like