fbpx

“ராமர் கோவில் போறவங்கலாம் வாங்க..” அயோத்தி செல்பவர்களுக்கு அறநிலையத் துறை உதவும்.! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.!

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ ராமரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி 12:20 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார்.

உத்திர பிரதேசம் மாநிலத்தின் புனித நகரான அயோத்தியில் ராம் மந்திர் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலின் திறப்பு விழா ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் அரசியல் பிரமுகர்கள் பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்விற்கு பொதுமக்கள் வரவேண்டாம் என ராம ஜென்ம பூமி அறக்கட்டளை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது ராமர் கோவில் செல்வதற்கு பக்தர்கள் விரும்பினால் அரசியல் ஏற்பாடு செய்யுமா.? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சேகர் பாபு ” இதுவரை ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்ல வேண்டும் என யாரும் கோரிக்கை வைக்கவில்லை”. ஒருவேளை யாரேனும் செல்ல விரும்பினால் அவர்களுக்கான உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து கொடுக்கும்” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” திராவிட மாடல் அரசு தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதானப் பணிகளை மேலும் பல கோவில்களுக்கு விரிவுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் பல கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது அனைத்து மக்களுக்குமான சமூக நீதியை நிலைநாட்டும் அரசு எனவும் தெரிவித்திருக்கிறார்.

Next Post

வந்தாச்சு சூப்பர் நியூஸ்.! TNPSC தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!

Sat Jan 6 , 2024
தமிழ்நாடு அரசின் பணிகளுக்கு TNPSC மூலமாக தேர்வு நடத்தப்பட்டு  அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் பணியமரத்தப்படுவார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது. குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரித்து TNPSC புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு முன்பு 5,413 ஆக இருந்த  பணியிடங்கள் தற்போது 6151 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 738 இடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த […]

You May Like