fbpx

பொங்கலுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் எப்போது கிடைக்கும்.? வெளியாக இருக்கும் அறிவிப்பு.!

2024 ஆம் வருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே மீதி இருக்கிறது. புது வருடம் பிறந்து விட்டால் இரண்டு வாரங்களில் தை திருநாளும் வந்து விடும். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த பரிசு குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என தமிழக மக்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத் தொகை குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் அதற்கான பணிகளில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

மேலும் பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்பு, வெள்ளம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்புகளும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை தொடர்பான நிவாரண பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதால் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Post

தமிழகத்தில் 35 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.! டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு.! விபரங்கள் என்ன.?

Sun Dec 24 , 2023
காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்நிலையில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் உத்தரவில் அதிகாரிகளின் பணியிட மாற்றங்களை தெரிவித்திருக்கிறார். தாம்பரம் உதவி காவல் ஆணையாளராக பணியாற்றிய காவல்துறை அதிகாரி சீனிவாசன் சைதாப்பேட்டை காவல்துறை உதவி ஆணையாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரி அசோக் செல்வன் தாம்பரம் போக்குவரத்து […]

You May Like