fbpx

தொங்கும் தொப்பை குறைந்து தட்டையான வயிறு வேண்டுமா.? சூப்பரான இந்த டிரிங்கை ட்ரை பண்ணுங்க.!

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களின் காரணமாக பெரும்பாலானவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இந்த உடல் பருமன் பிரச்சனையை சரி செய்வதற்கும் பானை போல் இருக்கும் வயிறு தட்டையாவதற்கும் இந்த ஒரு ஜூஸ் போதும். தொடர்ந்து ஏழு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதோடு வயிறும் தட்டை போல் மாறும்.

இந்த ஜூஸ் செய்வதற்கு 2 எலுமிச்சம் பழங்கள் 1 ஆப்பிள் மற்றும் சிறிது துண்டு இலவங்கப்பட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழம் மற்றும் ஆப்பிளை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் எடுத்து அவற்றில் ஆப்பிள், எலுமிச்சை பழ துண்டுகள் மற்றும் இலவங்கப்பட்டையை சேர்க்க வேண்டும்.

இதனை ஸ்டவ்வில் வைத்து 15 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் போது கிளறி விடவும். 15 நிமிடம் கொதித்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இவற்றை இறக்கி மூடி போட்டு ஒரு மணி நேரம் குளிர வைக்கவும். குளிர வைத்த பின் இதை ஒரு கிளாஸில் வடிகட்டி எடுத்தால் உடல் எடை குறைக்கும் ஜூஸ் ரெடி.

இதனை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்து வர வயிற்றில் இருக்கும் தொப்பை குறைவதோடு உடல் எடையும் குறையும். இதற்கு முக்கிய காரணம் இவற்றில் சேர்க்கப்படும் பொருள்களில் இருக்கும் சத்துக்களாகும். ஆப்பிள் குறைவான கலோரி கொண்டது மேலும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் உள்ளன. இவை கொழுப்புகளை வேகமாக கரைக்கிறது. லவங்கப்பட்டையிலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் கொழுப்பை கரைக்கும் மூலக்கூறுகள் நிறைந்திருக்கிறது.

Next Post

ஷாக் நியூஸ்... இனி இது கட்டாயம்...! பத்திரப் பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

Sat Dec 16 , 2023
இது குறித்து பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தலைமையில் பதிவுத்துறை தலைவரை உள்ளடக்கிய அலுவலர் குழுவானது, கர்நாடகா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறை குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், அதன் தொடர்ச்சியாக கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்தாய்வு கூட்டங்கள் அரசாணை (நிலை) எண். 131, வணிகவரி மற்றும் பதிவுத்துறை (1) நாள். 01.12.2023 […]

You May Like