fbpx

சக ஊழியர்கள் தன்னை கற்பழித்ததாக காவல் நிலையத்தில் புகார் வழங்கிய பெண்ணுக்கு…..! அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம் என்ன நடந்தது….?

பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதேபோல பல்வேறு நாடுகளிலும் பெண்கள் பாதுகாப்புக்காக பல சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதனை பயன்படுத்தி பலர் தவறு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், சிங்கப்பூர் நாட்டில் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது சிங்கப்பூர் நாட்டில் கடந்த 2021 ஆம் வருடம் ஒரு பெண் தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் மூன்று பேர் தன்னை கெடுத்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.

முன்னதாக, அந்த மூன்று பேருடன் அவர் ஒன்றாக மது அருந்தியதாக தெரிகிறது. அதன் பிறகு, மது போதையில் இருந்த அவர் தன்னுடைய உறவினர்களுக்கு போன் செய்து, தன்னுடன் வேலை பார்க்கும் மூன்று பேர் தன்னை கெடுத்து விட்டதாகவும், தான் இங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி அவர் இருந்த இடத்திற்கு ஒரு வாகனத்தையும் அனுப்ப சொல்லி இருக்கிறார்.

அதன்படி இதை கேட்ட அவருடைய உறவினர்கள் பதறிப் போய் அவர் சொன்ன இடத்திற்கு ஒரு வாகனத்தை அனுப்பியுள்ளனர். அதன் பிறகு அந்த வாகனத்தில் அவர் வீடு திரும்பினார்.

பின்னர் தன்னை தன்னுடன் வேலை பார்க்கும் சிலர் கெடுத்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். அதன் பிறகு அந்தப் பெண்ணின் உறவினரும் இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பல்வேறு அதிர்ச்சி உண்மைகள் வெளியானது.

மேலும் நடந்த தவறில் அந்த பெண்ணுடன் வேலை பார்த்த மூன்று பேருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும், இதில் முழுக்க, முழுக்க அந்த பெண் செய்த தவறுதான் என்றும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து, அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அதாவது தன்னுடன் வேலை பார்த்த மூன்று பேருடன் இவரே முழு சம்மதத்தோடு, உடலுறவில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. அதன்படி, அவருக்கு நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறை தண்டனையும், 5000 டாலர் அபராதமும், விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது

Next Post

BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Sat Sep 23 , 2023
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Defence Banking Advisor, Deputy Defence Banking Advisor பணிகளுக்கு என 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப […]

You May Like