fbpx

ஜாலி…! நாகை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை…! பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்…!

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கல் சிங்காரவேலர் கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. செலாவணி முறிச்சட்டம்‌ 1881-ன்‌ கீழ்‌ வராது என்பதால்‌, அரசுப்‌ பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள்‌ கவனிக்கும்‌ பொருட்டு மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம்‌ மற்றும்‌ சார்நிலை கருவூலங்கள்‌ குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்‌. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 2-ம் தேதி அன்று அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவித்து நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கல் சிங்காரவேலர் மிகப்பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்று. நாகபட்டிணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிக்கல் நவனீதஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயில் ஆச்சர்யமான அமைப்பாக முருக பெருமான் ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பெருமான் இருவரும் இங்கே அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

Vignesh

Next Post

"மழைக்காலம் வந்துடுச்சு…" நோய்களிலிருந்து காத்துக் கொள்ள உதவும் 5 பழங்கள்…!

Fri Nov 17 , 2023
பருவ மழை காலம் வந்தாலே அலர்ஜி நோய்த்தொற்றுக்கள் மற்றும் ஒவ்வாமை போன்றவை ஏற்படும். இது போன்ற உபாதைகளில் இருந்து நம் உடலை காத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இந்தப் பருவமழை காலம் மற்றும் குளிர் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த வைட்டமின்கள் நிறைந்த பழங்கள் நம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கவும் நோய்களிலிருந்து காத்துக் கொள்ளவும் உதவுகிறது. இவ்வாறு நம் உடலுக்கு நன்மை பயக்கும் ஐந்து […]

You May Like