fbpx

புரட்டி எடுத்த மழை…! இன்று 2 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை…! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை. அதிகனமழை, வெள்ளம் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது. இன்று ஒரு சில இடங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று நெல்லை , தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை என அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் மக்களும் தடையின்றி கிடைக்கும். இந்த மாவட்டங்களில் நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதன் காரணமாக தாழ்வான மற்றும் வெள்ள அபாயம் நிலவும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மழை காரணமாக 2 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகளும் இந்த மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் கூட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள. மேலும், குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இன்று இந்த 2 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

இன்பச் செய்தி...! இந்த 4 மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு...!

Tue Dec 19 , 2023
கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் […]

You May Like