fbpx

தமிழகமே…! ரேஷன் அட்டையில் கை ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்…! இல்லையென்றால் சிக்கல்

குடும்ப அட்டை உறுப்பினர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC மூலம் பதிவினை மேற்கொள்ள இன்றே கடைசி நாள் ஆகும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ன் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் தொடர்பான e-KYC பதிவானது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி படிப்பு முறையில் நியாயவிலைக்கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. PHH குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களில் உள்ள குடும்ப உறுப்பினர்களும், AAY குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களில் உள்ள குடும்ப உறுப்பினர்களும், தங்களது e KYC பதிவினை பலர் அப்டேட் செய்யாமல் உள்ளனர்.

பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகை பதிவினை e-KYC (electronic Know Your Customer) சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடையில் இன்று மாலைக்குள் பதிவு செய்திட வேண்டும் என சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்திட வேண்டும்.

English Summary

Today is the last day to register fingerprints for ration cards.

Vignesh

Next Post

நாளை முதல் தொடங்கும் புதிய நிதியாண்டு!. RBI-ன் கடன் கொள்கை முதலீட்டாளர்களுக்கு எப்படி இருக்கும்?

Mon Mar 31 , 2025
The new financial year starts tomorrow! How will RBI's credit policy affect investors?

You May Like