fbpx

இந்த 10 மாவட்டங்களில்.. இன்று கனமழை கொட்டி தீர்க்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான முதல் கனமழை பெய்தது.. இதே போல், கிருஷ்ணகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.. இந்த மழை காரணமாக, வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது..

இந்நிலையில் இன்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் இன்று, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லக்கூரில் 8 செ.மீ மழையும், தொழுதூரில் 6 செ.மீ மழையும், மணம்பூண்டி, திண்டிவனத்தில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

"இது புது மாதிரி திருட்டா இருக்கே"??? சிறுதொழில் அதிபர்களை குறிவைத்த நைஜீரிய கும்பல்! மும்பையில் மடக்கி பிடித்த போலீஸ்!

Fri Mar 24 , 2023
சென்னையைச் சார்ந்த தொழிலதிபரிடம் லிங்க்டு சமூக வலைதளத்தின் மூலமாக 34 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டு கும்பலை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னை கொளத்தூரைச் சார்ந்தவர் விஜய். இவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வந்தார். லிங்க்டு சமூக வலைதளம் மூலமாக இவரை தொடர்பு கொண்ட நோரா என்ற பெண் சென்னை கனடாவிலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கனடாவில் மருத்துவ துறையில் ஏராளமான மூலிகைகள் தேவை […]

You May Like